"இந்த சட்டமன்ற தேர்தல் தான், தான் போட்டியிடும் கடைசி தேர்தல் " பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்
தற்போது நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தல் தான் தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
தம்தகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இன்றுடன் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதை சுட்டிக்காட்டினார். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், இதுவே தனது கடைசி தேர்தல் என்று குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிதிஷ்குமார், அனைத்தும் நல்லதாகவே நடக்கும், நல்லதாகவே முடியும் என்றார்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் சோர்வடைந்து விட்டதால், பீகாரை அவரால் ஆட்சி செய்ய முடியாது என்று விமர்சித்துள்ளார்.
Comments